என்ன நடக்கிறது மத்திய பிரதேசத்தில்?

என்ன நடக்கிறது மத்திய பிரதேசத்தில்?

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கவிழும் நிலை; முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதவி விலகினார் அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் பதவி விலகினார் அதில் ஆறு பேர் தற்போதைய அமைச்சர்களாவர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 104 தொகுதி பெரும்பான்மை தேவைப்படுகிறது. இந்த 22 பேர் விலகலுக்கு பின்னர் காங்கிரசில் 99 ஆதரவாளர்களும். பிஜேபியில் 107 ஆதரவாளர்களும் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியாவை சேர்த்து 22 பேரும் பெங்களூருவில் உள்ளதாக தகவல் தெரிகின்றது. மேலும் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் ஆதரவாளர்கள் பிஜேபியில் இணைய உள்ளனர்.

10/03/2020 அன்று நடந்த பிஜேபியின் கூட்டத்தில்: காங்கிரஸில் பெரும்பான்மை இல்லாத, இந்த நேரத்தில் தங்கள் எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி காங்கிரஸ் பக்கம் இழுக்கக் கூடும்மென்ற எண்ணத்தில். எம்எல்ஏக்கள்(BJP) அனைவரையும் வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

15 வருடம் கழித்து மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அமர்த்திய காங்கிரசுக்கு 15 மாதத்தில் ஏற்பட்டுள்ள அவல நிலை என்பதே உண்மை.