ரஜினிகாந்த் முதல்வராகப் போவதில்லை என அறிவிக்கப் போவதாக தகவல்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்தபடியே மாவட்ட செயலாளர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேச உள்ளதாகவும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்தபடியே ரஜினியுடன் உரையாட உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. ஆனால் ரஜினியின் பேச்சு சினிமா பட டயலாக் போலவே கடந்து விடுமா என்ற அச்சம் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்தன. அவற்றுக்கு இன்று நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்தபடியே மாவட்ட செயலாளர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேச உள்ளதாக தகவல். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்தபடியே ரஜினியுடன் உரையாட உள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நட்பு வட்டாரங்களையும் ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தான் முதல்வராக போவதில்லை என்ற அறிவிப்பை ரஜினி இன்று வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 thoughts on “ரஜினிகாந்த் முதல்வராகப் போவதில்லை என அறிவிக்கப் போவதாக தகவல்

 1. Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it.
  Look advanced to far added agreeable from you! However,
  how could we communicate?

 2. I am extremely inspired along with your writing talents and also
  with the structure on your weblog. Is that this a paid subject or did you customize it yourself?
  Anyway keep up the nice high quality writing, it is rare
  to look a great blog like this one these days..

Comments are closed.