ரஜினிகாந்த் பிரஸ்மீட்டில் பேசியது.

ரஜினிகாந்த் பிரஸ்மீட்டில் பேசியது.

 

“முந்தைய பிரஸ்மீட்டில்: எல்லாமே நல்லாத் தான் நடக்குது, எல்லாருக்கும் ரொம்ப திருப்தி ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஏமாற்றம் என்றேன்”

“இந்த பிரஸ்மீட்டுக்கு பிறகு ஒவ்வொருவரும் ஒரு கோணங்களில் தங்கள் பார்வையை பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் மாவட்ட செயலாளர்கள் மூலம் எந்த விஷயமும் வெளிவரவில்லை என்பதால் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே வந்துள்ளேன்”

என்னுடைய எதிர்கால அரசியல் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை மக்களுக்குத் தருகிறேன்

எல்லோரும் சொல்கிறார்கள் நான் 1996-இல் இருந்து அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேனென்று. ஆனால் நான் 2017 டிசம்பர் 31 அன்று தான் வெளிப்படையாக சொன்னேன். 1996 இல் எதிர்பாராதவிதமாக சினிமாவின் அந்த கதாபாத்திரம் அமைந்தது. அனைவரும் கேட்டார்கள் எப்போது அரசியலுக்கு வரப்போகிறேனென்று.நான் சொன்னேன் எல்லாம் ஆண்டவன் கையில் உள்ளதென்று. ஒருபோதும் இப்பொது வரப்போகிறேன், அப்போது வரப்போகிறேன் என்று சொல்லவே இல்லை. நான் சொன்னது எல்லாம் 2017 டிசம்பர் 31 அன்று தான்.

2016 அம்மையார் ஜெயலலிதாவுக்கு பிறகும் டாக்டர் கலைஞருக்கு பிறகும் ஒரு வெற்றிடம்முள்ளது என்றேன் அதனால் இத்தகைய முடிவெடுத்தேன்.

“நான் முன்பே சொல்லியிருக்கிறேன் சிஸ்டம் கெட்டுப்போயிருக்குனு”

எனவே

“அரசியல் மாற்றம் செய்யாமல் ஆட்சி மாற்றம் மட்டும் செய்தால் அது மீன் குழம்பு வச்ச பாத்திரத்தை கழுவாமல் சக்கரை பொங்கல் வைத்த மாதிரி இருக்கும்”.

“டி.எம்.கே, ஏ.டி.எம்.கே போன்ற கட்சிகளின் மொத்த பதவிகள் 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும்.
இவரெல்லாம் தேர்தல் காலகட்டத்தில் தேவைப்படுவார்கள்; இல்லை என மறுக்க இயலாது. ஆனால், அதன் பின்பும் இவர்கள் தொடர்வதற்கான அவசியமில்லை. இவ்வாறு பின் தொடர்வதால் நாங்கள் ஆளும் கட்சிக்காரர்கள் என்று ஏழை மக்களுக்கு பணங்களை போய் சேர விடாமல் செய்வது, டென்டர் போன்றவற்றை தாங்களே எடுத்துக் கொள்வது என முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்”

“உதாரணமாக ஒரு கல்யாணம் செய்கிறார்கள். அன்றுமட்டும் அங்கு சமைப்பதற்கு, டிரைவர் போன்ற அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள். அதற்காக அவர்களை கல்யாணத்திற்குப் பின்பும் நம் வீட்டிலேயே வைத்திருக்கவா முடியும்?”

இதனைத் தடுக்க நாம்

1) தேர்தல் நேரங்களில் தேவைப்படும் பதவிகளை உயர்த்திக் கொண்டும். தேர்தலுக்குப் பின்பு தேவைப்படும் பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு (குறைத்துக் கொண்டு) பயணிப்போம்.

“தற்போதைய சட்டமன்றத்தில் 50-52 வயதிற்கு மேல் உள்ளவர்களே அதிகம் உள்ளனர். 40 அல்லது 40க்கு கீழ் உள்ளவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி இல்லையென்றால் எம்.எல்.ஏ வின் மகன், எம்.பி மகன் அல்லது கோடீஸ்வரன் நானாக இருக்க வேண்டும் ”

2) நாம் 60-65% 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இடமளிக்க வேண்டும்; கண்ணியம் போன்ற நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவர்களுக்கு இடமளிக்க போகின்றோம். மேலும் 35-40% ஓய்வுபெற்ற நீதிபதி போன்ற உயர் அதிகாரிகளையும், வேறு கட்சிகளில் நல்லது செய்வதற்காக வாய்ப்புகளுக்காக ஏங்கி கொண்டிருப்பவர்களையும் நியமிக்கப் போகிறோம்.

3) ஒருவர் பதவியை அடைந்து விட்டால் அவரை அடுத்த ஐந்த வருடத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது, யாராலும் கேட்க இயலாது. இதனை தடுக்கும் வகையில் கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என இரு தலைமையை உருவாக்குவோம். கட்சித் தலைமை ஒரு எதிர்க்கட்சி போல் செயல்படும்.

நான் ஆட்சிக்கு தலைவரா கட்சிக்கு தலைவர் என்ற கேள்வி வரும்: எனக்கு பிறரைப் போல சட்டமன்றத்தில் பேச தெரியாது எனவே நான் கட்சிக்கு தலைமை ‌‌ தாங்குவேன். ஆட்சித் தலைமையை ஒரு அறிவு சார்ந்த குழு நடத்தி வரும்.

கட்சி என்றால் என்ன?

கொள்கைகள் தான் கட்சி!

ஒருவேளை ஆட்சி சரியாக நடைபெறாவிட்டால் கட்சித் தலைமை அதனை தூக்கி எறியும் வல்லமை பெற்றிருக்கும்.

“தலைவன் சொல்றத கேட்கிறவன் தான் தலைவன்; தொண்டன் சொல்றத கேக்குறவன் தலைவன் அல்ல!”

எனக்கு பதவியில் ஆசை இல்லை, பணத்திலும் ஆசை இல்லை நான் கனவில் காணமுடியாத அளவிற்கு பணத்தை நீங்கள் எனக்கு தந்துவிட்டீர்கள். இங்கே நான் வந்ததற்கு காரணம் எனக்கு அள்ளிக் கொடுத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஒன்றே.

இறுதியாக: அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்பொழுது வராவிட்டால் எப்பொழுதும் வராது!