பிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ்.

கொரோனாவிடம் கவனமாக இருக்கவேண்டும் ஆனால் பயப்படக்கூடாது; சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.

பிரதமர் நேரலை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இலங்கை, பூடான் போன்ற சார்க் உறுப்பினர் நாடுகளுடன் கொரோனாவை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பேசியுள்ளார்.

மருத்துவர்களுக்கு இந்த வைரசிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு பல திட்டங்கள் மூலமாக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வைரசை கண்டுபிடிப்பதற்கான முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதற்கான ஆராய்ச்சி மையங்களும் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது.

இதுவரை 1400 இந்தியர்கள் மற்ற நாடுகளில் இருந்து மீட்கப்பட்டு இருக்கின்றனர் மேலும் இந்தியாவில் 500க்கும் குறைவான மக்களே இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கவனமாக எதிர்கொள்ள வேண்டும், பயப்படத் தேவையில்லை.

சார்க் நாடுகள் மிகவும் நெருக்கமானது. நாம் ஒன்று சேர்ந்தால் இந்த வைரஸ் பரவலை தடுத்து நிறுத்த முடியும் எனப் பேசியுள்ளார்.