நளினியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நிதிமன்றம்!

நளினியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழுவரில் ஒருவரான நளினி அளித்த மனுவில்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யுமாறு கூறினார்.

2018 செப்டம்பர் 11 ஆம் தேதி ஆளுநர் பரிந்துரைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி எடுத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தீர்மானத்திற்கு ஆளுநரிடம் இருந்து இன்று வரை பதில் வரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நளினி இத்தகைய தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இதனை விசாரித்த ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு தீர்மானம் நிறைவேற்றிய பின்பு இவர்கள் சட்ட விரோதமாக காவலில் உள்ளார்களா? இல்லையா? என்று மத்திய, மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறியது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு எழுவர் விடுதலையின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது மத்திய அரசு மேலும் இதனை சிபிஐ விசாரணை செய்தது எனவே மத்திய அரசின் இசைவு இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பதிலளித்தது. மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் நிலுவையில் உள்ளதால் இவர்களின் காவல் சட்டவிரோதமானதாக கருதப்படாது.

மேலும் எழுவர் விடுதலை தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு 2012 ஆம் ஆண்டு நிராகரித்து விட்டதால் இன்று தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் “பூஜ்ஜியதிற்கு சமானம்” என்றது நீதிமன்றம்.

நளினியின் சார்பாக வாதிட்டவழக்கறிஞர் ஆளுநர் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் மேலும் தமிழக அரசை “ஆளுநர் நடத்துகிறாரா? இல்லை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா?”,என்ற சந்தேகங்கள் எழும்புகிறது போன்ற வாதங்களை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனினும் மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.