ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச்-Apple வாட்சிற்கு போட்டியாக இருக்குமா?

சீன நிறுவனமான ஓப்போ நிறுவனம் முதன்முதலில், நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக, இந்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான FIND X2 வெளியிடப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்சில், அந்நிறுவனம் பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு போட்டியாக ஸ்டைலான வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

41 மிமீ , 46 மிமீ ஆகிய 2 அளவுகளில் சதுர வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இதில், கூகுளின் வியர் ஓஎஸ்(Wear OS) இயங்குதளத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், AMOLED டிஸ்ப்ளே, ஃப்ளாஷ் சார்ஜ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. உடலியல் செயல்பாடு, இதயத்துடிப்பு குறித்த பல்வேறு தகவல்களைக் காண்பிக்கும் வகையிலும், 3 டி கிளாஸ் தொழில் நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாகவும் உள்ளது.